மாவட்ட செய்திகள்

வலங்கைமான் அருகே: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி - அரசு பஸ் மோதியது + "||" + Near Valangaiman: Motorcycle worker killed -The state bus collided

வலங்கைமான் அருகே: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி - அரசு பஸ் மோதியது

வலங்கைமான் அருகே: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி - அரசு பஸ் மோதியது
வலங்கைமான் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.
வலங்கைமான், 


திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் அருகே உள்ள கீழஅமராவதியை சேர்ந்தவர் வேல்ராஜ். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவர், சம்பவத்தன்று இரவு ஆலங்குடியில் நடந்த காய்கறி சந்தையில் பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருவோணமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது கும்பகோணத்தில் இருந்து திருத் துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ் குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது கிரேனில் இருந்து கல் விழுந்து தொழிலாளி பலி
கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது கிரேனில் இருந்து கல் விழுந்து தொழிலாளி பலியானார்.
2. ஆலங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
ஆலங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. சேலம் வீராணம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
சேலம் வீராணம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
4. காங்கேயம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு
காங்கேயம் அருகே கீழ் பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
5. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி உறவினர் படுகாயம்
தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். உடன் சென்ற உறவினர் படுகாயம் அடைந்தார்.