மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் + "||" + In a dispute with a young girl Killing girl: Police Inspector Suspension of work

இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளம்பெண்ணின் தாயார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 40). இவருடைய மனைவி பரமேஸ்வரி(38). சம்பவத்தன்று இவர்களுடைய 16 வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார்(25) என்ற வாலிபர் கிண்டல் செய்தார்.

இது குறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின்பேரில் ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட், வினோத்குமாரை போலீஸ் நிலையம் வரவழைத்து கண்டித்து அனுப்பி வைத்து விட்டார்.

இதற்கிடையில் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்த பிரேம்குமார், தனது மகளை கிண்டல் செய்தது குறித்து வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் பிரேம்குமாரை, வினோத்குமார் அடித்து உதைத்தார்.

இதுபற்றி அறிந்ததும் பாரிமுனை ரேவ் பகுதியில் உள்ள பிரேம்குமாரின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தனர். இதனால் மோதல் வெடித்தது. இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், வீட்டில் இருந்த கத்தியால் பிரேம்குமாரின் உறவினர்களை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மேரி(40) என்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க முயன்ற மேரியின் தங்கை மெர்லின், பிரேம்குமார் இருவரும் படுகாயம் அடைந்து, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், அவருடைய தம்பி தமிழ்செல்வன்(24), உறவினர் சங்கர்(27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இளம்பெண்ணின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரில் வினோத்குமார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மோதல் சம்பவமும், அநியாயமாக ஒரு அப்பாவி பெண் கொலை செய்யப்பட்டு இருக்க மாட்டார் என அந்த பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் சரியாக செயல்படவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி விசாரணை நடத்தும்படி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோரது மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பரமேஸ்வரி முதலில் புகார் அளித்தபோதே வினோத்குமார் மீது இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த பெண் கொலையை தடுத்து இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெண் கொலை சம்பவத்துக்கு முன்னதாக பிரேம்குமார் மற்றும் அவர்களது உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக, கைதான வினோத்குமாரின் மனைவி விஜயலட்சுமி(23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைதான 3 பேருடன் சேர்த்து அவரையும் சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பா? விசாரணை தீவிரம்
திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
2. தூங்கி கொண்டிருந்தவர் தலையை துண்டித்து கொலை: 9 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த கொலையாளிகள் 7 பேருக்கு வலைவீச்சு
மதுரையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 ஆண்டுகள் காத்திருந்து கொலையாளிகள் பழி தீர்த்துள்ளனர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. செங்கம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை உறவினர்கள் கைவரிசையா? என போலீஸ் விசாரணை
செங்கம் அருகே ஓய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை உறவினர்கள் கொள்ளையடித்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கமுதி அருகே இளம்பெண்ணை கொன்றுவிட்டு காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்; அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை பெற்று மோசடி செய்ததும் அம்பலம்
இளம்பெண்ணை அவருடைய உறவினர்களே கொடூரமாக கொன்றுவிட்டு, அவருடைய கள்ளக்காதலன் கொன்றதாக திசை திருப்பிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிய வைத்து அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை மோசடியாக பெற்றதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
5. கோபி அருகே பரிதாபம் மரத்தில் கார் மோதி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலி; போலீஸ் நண்பராக உடன் சென்ற வாலிபர் படுகாயம்
கோபி அருகே மரத்தில் கார் மோதியதில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பலியானார். போலீஸ் நண்பராக உடன் சென்ற வாலிபரும் படுகாயம் அடைந்தார்.