இலுப்பூரில் இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி


இலுப்பூரில் இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 Oct 2018 10:30 PM GMT (Updated: 21 Oct 2018 8:09 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் விளாப்பட்டியில் தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதற்கு நேரு யுவகேந்திரா புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார். இதில் தூய்மை இந்தியா திட்ட பொறுப்பாளர் அஸ்வின்குமார் கழிவறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார். இதில் நேரு யுவகேந்திரா கணக்காளர் நமச்சிவாயம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மரியராஜ் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இடையே பாராளுமன்றத்தில் மத்திய மந்திரிகள் பதவியேற்பு, உறுதிமொழி ஏற்பு மற்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மந்திரிகள் பதிலளிப்பது போல் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். முடிவில் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

Next Story