தூய்மை இந்தியா விழிப்புணர்வு அஞ்சல் அட்டை அரியலூர் கலெக்டர் வெளியிட்டார்


தூய்மை இந்தியா விழிப்புணர்வு அஞ்சல் அட்டை அரியலூர் கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 8:17 PM GMT)

தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு அடங்கிய அஞ்சல் அட்டை நேற்று அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

அரியலூர்,

தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு அடங்கிய அஞ்சல் அட்டை நேற்று அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இந்திய அஞ்சலக துறையின் சார்பில், தூய்மை இந்தியா விழிப்புணர்வு அடங்கிய புதிய அஞ்சல் அட்டையினை அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டார். திருச்சி கோட்டம் கட்டுப்பாட்டிலுள்ள 52 அஞ்சல் நிலையங்களிலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள 45 அஞ்சல் நிலையங்களிலும் ரூ.2 மதிப்புள்ள இந்த அட்டை 25 பைசா மானியத்தில் விற்பனை செய்யப்படும். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.2 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) (பொறுப்பு) லலிதா, முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் (திருச்சி கோட்டம்) கணபதி சுவாமிநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் (அஞ்சல் துறை) பாண்டியன், வணிக விற்பனை அதிகாரி ஐசக் சேவியர், அரியலூர் அஞ்சல் தலைவர் டோமினிக் ராஜ் மற்றும் அரியலூர் தபால் காரர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story