பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளுக்கு ரூ.400 கோடியில் தனிகுடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் தங்கமணி தகவல்


பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளுக்கு ரூ.400 கோடியில் தனிகுடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2018 4:30 AM IST (Updated: 12 Nov 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளுக்கு ரூ.400 கோடியில் தனிகுடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் சங்ககிரி ரோட்டில் உழவர் பணி கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.1¾ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் பயிர் கடன், சுயஉதவிக்குழு கடன், மகளிர் சிறுவணிக கடன் ஆகியவற்றை 17 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், நாமக்கல் இணை பதிவாளர் பாலமுருகன், துணை பதிவாளர் வெங்கடாசலம், மேலாண்மை இயக்குனர் திரவியம், சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில், முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் வெள்ளிங்கிரி, முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ். தலைவர் திருமூர்த்தி, சங்கத்தின் இயக்குனர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

இந்த கூட்டுறவு சங்கம் சார்பில் வெப்படையில் பெட்ரோல் பங்க் நிறுவ ஏற்பாடு செய்யப்படும். குமாரபாளையம் தொகுதிக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். உயர்மட்ட மேம்பாலம், குமாரபாளையத்தில் கலைக்கல்லூரி நிறுவப்பட்டு உள்ளன. பொறியியல் கல்லூரி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சாயப்பட்டறை பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். ரூ.400 கோடியில் பூலாம்பட்டியில் இருந்து பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளுக்கு தனிகுடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

Next Story