பன்றிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி


பன்றிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி
x
தினத்தந்தி 12 Nov 2018 3:30 AM IST (Updated: 12 Nov 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான்.

விருதுநகர்,

விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் ஆதிகுரு. கூலித்தொழிலாளியான இவரது மகன் ஆதிசங்கர் (வயது 12). மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்த இந்த சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆதிசங்கருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவன் பரிதாபமாக இறந்தான். இதைதொடர்ந்து சுகாதார துறையினர் கருப்பசாமி நகர் பகுதியில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story