காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்பு மந்திரிசபை விரிவாக்கம் சித்தராமையா பேட்டி


காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்பு மந்திரிசபை விரிவாக்கம் சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 11 Nov 2018 11:15 PM GMT (Updated: 11 Nov 2018 9:32 PM GMT)

காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று சித்தராமையா கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கதக்கில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கம்

ஈசுவரப்பாவுக்கு தலையில் மூளையே கிடையாது. என்ன பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல் அவர் பேசுகிறார். நான் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் தலைவர் என்று எனக்கு ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் பட்டம் வழங்கி இருக்கிறதா?. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டேன்.

கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். பா.ஜனதாவின் புகழை கெடுக்கும் நோக்கத்தில் தன்னை கைது செய்திருப்பதாக ஜனார்த்தனரெட்டி கூறி இருக்கிறார். அவர் பா.ஜனதாவில் இல்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பாவே கூறியுள்ளார்.

பா.ஜனதாவை நிராகரிக்க...

அதனால் ஜனார்த்தனரெட்டியின் குற்றச்சாட்டுக்கு அர்த்தம் இல்லை. பல்லாரி மற்றும் ஜமகண்டி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிக அளவிலான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதாவை நிராகரிக்க மக்கள் முடிவு செய்துள்ளதை இந்த இடைத்தேர்தல் முடிவு வெளிக்காட்டுகிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story