‘கஜா’ புயல்: கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு


‘கஜா’ புயல்: கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 10:30 PM GMT (Updated: 14 Nov 2018 8:23 PM GMT)

‘கஜா’ புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்பு செல்வன் அறிவித்துள்ளார்.

கடலூர்,

வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘கஜா’ புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே இன்று(வியாழக்கிழமை) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் புயலில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளுடன், மாவட்ட நிர்வாகம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசுவதோடு, கனமழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி கடலூர்–பாம்பன் இடையே 15–ந்தேதி(இன்று) பிற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று(வியாழக்கிழமை) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் அன்பு செல்வன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story