பாந்திரா குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து 15 வீடுகள் எரிந்து நாசம்


பாந்திரா குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து 15 வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:18 AM IST (Updated: 28 Nov 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

பாந்திரா குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 வீடுகள் எரிந்து நாசமாகின.

மும்பை,

மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தையொட்டி ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று காலை 10.20 மணியளவில் பாந்திரா ரெயில்நிலையம் கிழக்கு, குடிசைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து அங்குள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தநிலையில் தீ மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் அக்பர் சேக்(வயது50), ஆஷிப் மன்சுரி(35) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். மேலும் சுமார் 15 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story