மாவட்ட செய்திகள்

எடப்பாடி அருகே, குடும்ப தகராறில்: கடப்பாரையால் அடித்து மனைவி கொலை - முதியவர் கைது + "||" + Near Edappadi, family dispute: kadaparayal adithu Wife killed

எடப்பாடி அருகே, குடும்ப தகராறில்: கடப்பாரையால் அடித்து மனைவி கொலை - முதியவர் கைது

எடப்பாடி அருகே, குடும்ப தகராறில்: கடப்பாரையால் அடித்து மனைவி கொலை - முதியவர் கைது
எடப்பாடி அருகே குடும்ப தகராறில் கடப்பாரையால் மனைவியை அடித்து கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எடப்பாடி, 

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேம்பனேரியை சேர்ந்தவர் பெரமன் (வயது 72). இவருடைய மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

பெரமனும், லட்சுமியும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாகவும், அப்போது மகன்கள் வந்து பெற்றோரை சமாதானம் செய்து வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் நேற்று காலையிலும் பெரமனுக்கும், லட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெரமன் வீட்டில் கிடந்த கடப்பாரையை எடுத்து லட்சுமி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் பெரமனை கைது செய்தனர்.

மனைவியை கணவரே கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூர் அருகே, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை
திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
2. குடும்ப தகராறில், மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை - தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
3. தேனி அருகே, கள்ளநோட்டை மாற்ற முயன்ற முதியவர் சிக்கினார் - ரூ.42 ஆயிரத்து 800 பறிமுதல்
தேனி அருகே கள்ளநோட்டை மாற்ற முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.42 ஆயிரத்து 800 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
4. விவாகரத்து கோரிய மனைவியை வெட்டிக்கொன்ற அரசு பஸ் டிரைவர்
திண்டுக்கல் அருகே விவாகரத்து கோரிய மனைவியை அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் வெட்டி கொன்றார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.
5. நடத்தையில் சந்தேகம் , மனைவியை கொன்ற தொழிலாளி கைது
குண்டடம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆசிரியரின் தேர்வுகள்...