வெளிநாட்டு பிரஜைகளிடம் பணம் பறித்த 9 பேர் கைது


வெளிநாட்டு பிரஜைகளிடம் பணம் பறித்த 9 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 12:07 AM GMT (Updated: 16 Dec 2018 12:07 AM GMT)

வயகரா மாத்திரைகளை அனுப்பி வெளிநாட்டு பிரஜைகளிடம் பணம் பறித்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக பார்சலில் தடைசெய்யப்பட்ட வயகரா மாத்திரைகள் வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நந்தாம் இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள கட்டிடத்தின் 2-வது மாடிக்கு சென்ற போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையில், அவர்கள் போலியாக கால்சென்டர் தொடங்கி வெளிநாடுகளில் வசிக்கும் பிரஜைகளை தொடர்பு கொண்டு குறைந்த விலையில் வயகரா மாத்திரைகளை பார்சல் மூலம் வினியோகித்து வந்தது தெரியவந்தது. மேலும் ஆன்லைன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் போலி கால்சென்டர் நடத்தி வந்த மேலாளர் எல்விஸ் உள்பட 9 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story