சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்


சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 10 Jan 2019 11:45 PM GMT (Updated: 10 Jan 2019 7:57 PM GMT)

சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பாலகிருஷ்ணன்

* சென்னை கிழக்கு இணை கமிஷனர் அன்பு, மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

* மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், சென்னை கிழக்கு இணை கமிஷனராக பதவி ஏற்பார்.

துணை கமிஷனர்கள்

* தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாந்தி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், தர்மபுரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

* சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜீ ஜார்ஜ் சென்னை மேற்கு போக்கு வரத்து போலீஸ் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

* சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் தீபா கனிக்கர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை பூக்கடை துணை கமிஷனர் சாம்சன், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

* ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டு அசோக்குமார், சென்னை தியாகராயநகர் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

அரவிந்தன்

* சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன் பூக்கடை துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

* வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவலி பிரியா காந்தபுனேரி மாதவரம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

* மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வன் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

* தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை (11-வது பட்டாலியன்) கமாண்டராக பொறுப்பு ஏற்பார்.

* ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை (11-வது பட்டாலியன்) கமாண்டர் எஸ்.எஸ்.மகேஷ்வரன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story