சென்னையில் மூடு பனி: கோவை, நீலகிரி மாவட்டங்களில் உறைபனி நிலவும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் மூடு பனி: கோவை, நீலகிரி மாவட்டங்களில் உறைபனி நிலவும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2019 6:30 PM GMT (Updated: 23 Jan 2019 5:59 PM GMT)

சென்னையில் மூடு பனி: கோவை, நீலகிரி மாவட்டங்களில் உறைபனி நிலவும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(வியாழக்கிழமை) வறண்ட வானிலை காணப்படும் என்றும், நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 27–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், வானம் மேக மூட்டமின்றி தெளிவாக காணப்படுவதால், பூமியில் உள்ள வெப்பம் இரவு நேரங்களில் நேரடியாக வளிமண்டலத்துக்கு சென்று விடும் என்றும், இதனால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் உறைபனி நிலவும் என்றும் தெரிவித்து உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மூடுபனி நிலவும் என்றும், குறைந்தபட்சம் 20 டிகிரி முதல் அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story