மாவட்ட செய்திகள்

குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் பறிமுதல்; அதிகாரியிடம் விசாரணை + "||" + Rs.3½ lakhs confiscated in the Kumari Collector's office premises; Investigate the officer

குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் பறிமுதல்; அதிகாரியிடம் விசாரணை

குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் பறிமுதல்; அதிகாரியிடம் விசாரணை
குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் மாடசாமி சுந்தர்ராஜ் (வயது 48). இவர் அரசு பணிகளை டெண்டர் விடுவது சம்பந்தமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி புகார் சென்றது.


இதனையடுத்து நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்தனர். இந்தநிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் போலீசாரும், தோவாளை தாசில்தார் திருவாழி ஆகியோர் குமரி கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் மறைந்திருந்தனர்.

இரவு 9 மணிக்கு மாடசாமி சுந்தர்ராஜ் கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு காரில் வந்தார். இதனை கவனித்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர் வந்த காரை சோதனை செய்தனர். இதில், காரின் பின் இருக்கையில் ரூ.3 லட்சத்து 52 ஆயிரமும், மாடசாமி சுந்தர்ராஜின் சட்டைப்பையில் ரூ.18 ஆயிரமும் இருந்தது. இந்த பணம் பற்றி அவரிடம் போலீசார் கேட்ட போது, அவர் முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. மேலும் அதற்குரிய ஆவணத்தையும் காட்டவில்லை.

இதனையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் தொடர்பாக மாடசாமி சுந்தர்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மாடசாமி சுந்தர்ராஜின் சொந்த ஊர் நெல்லை வண்ணாரப்பேட்டை.

குமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் நீடாமங்கலத்தில் ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சியில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. திருச்சி ஜங்ஷன் யார்டில் ரெயில்வே பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு போலீசார் விசாரணை
திருச்சி ஜங்ஷன் யார்டில் ரெயில்வே பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.