திருச்சி விமானநிலையத்தில் ரூ.10 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்


திருச்சி விமானநிலையத்தில் ரூ.10 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2019 10:45 PM GMT (Updated: 16 March 2019 7:01 PM GMT)

விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை வான்நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

செம்பட்டு,

வெளிநாடுகளில் இருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு நேற்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை வான்நுண் ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஜவாஹிர்(வயது 26) என்ற பயணியிடம் சோதனை நடத்தியபோது, அவர் தனது உடைமைக்குள் மறைத்து ரூ.9 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள தலா 100 கிராம் எடை கொண்ட 3 தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story