வளசரவாக்கத்தில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்கநகை கொள்ளை


வளசரவாக்கத்தில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்கநகை கொள்ளை
x
தினத்தந்தி 17 March 2019 3:24 AM IST (Updated: 17 March 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்கநகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பூந்தமல்லி,

வளசரவாக்கம் ஸ்ரீலட்சுமி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 58). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

இந்த நிலையில் பத்மநாபன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே பத்மநாபனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நகை கொள்ளை

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

விசாரணையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 50 பவுன் தங்கநகைகள் மற்றும் பணம், வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story