நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.22.67 லட்சம் பறிமுதல்


நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.22.67 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 March 2019 9:45 PM GMT (Updated: 17 March 2019 9:59 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.22 லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க 54 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறது.

இந்த குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ரூ.22 லட்சத்து 67 ஆயிரம் மற்றும் 8¾ கிலோ வெள்ளி பொருட்கள், 5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு சம்பந்தப்பட்ட நபர் ஆவணங்களை ஒப்படைத்ததை தொடர்ந்து, அவரிடம் திரும்ப கொடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story