மேல்மலையனூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்


மேல்மலையனூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 March 2019 4:00 AM IST (Updated: 19 March 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மேல்மலையனூர்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலைக்குழுவினர் கலந்து கொண்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடனம், பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் தாசில்தார்கள் மேல்மலையனூர் செந்தில்குமார், செஞ்சி ஆதிபகவான், மண்டல துணை தாசில்தார்கள் பசுபதி, செல்வமூர்த்தி, தேர்தல் பிரிவு ராதாகிருஷ்ணன், அருண்மொழி, வட்ட வழங்கல் அலுவலர் வினோத்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story