மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Rs 5 lakhs were cut by the Taskmak employee Police brigades for robbery victims

டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.5¼ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மேற்பார்வையாளர் முருகன் (வயது 38), உதவி விற்பனையாளர் புஷ்பராஜன் ஆகியோர் பணியில் இருந்தனர். இவர்கள் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, பாதுகாப்பு கருதி விற்பனை பணத்தை வீட்டுக்கு எடுத்து செல்வது வழக்கம்.


அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு விற்பனை பணம் ரூ.5 லட்சத்து 33 ஆயிரத்துடன் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் வீட்டுக்கு புறப்பட்ட னர்.

பணத்தை மேற்பார்வையாளர் முருகன் தனது வாகனத்தில் வைத்திருந்தார்.

அவர்கள் குமாரபுரம் சாலையில் ஒரு பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென முருகனை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதைபார்த்த புஷ்பராஜன் போலீசாருக்கு தகவல் கொடுப்பதற்காக போலீஸ் நிலையம் நோக்கி விரைந்து சென்றார்.

அதற்குள் அந்த மர்ம நபர்கள் முருகனை சரமாரியாக வெட்டிவிட்டு, பையில் இருந்த ரூ.5 லட்சத்து 33 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த முருகனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யம் அருகே செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய வழக்கில் 3 பேருக்கு வலைவீச்சு
வேதாரண்யம் அருகே செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய வழக்கில் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் அண்ணன்-தம்பிக்கு போலீசார் வலைவீச்சு
விராலிமலை அருகே டிராக்டரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
3. குமாரபுரம் அருகே துணிகரம் ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
குமாரபுரம் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. கடனுக்கு பெட்ரோல் கொடுக்காததால் ஊழியர்கள் மீது தாக்குதல் 3 பேருக்கு வலைவீச்சு
கபிஸ்தலம் அருகே கடனுக்கு பெட்ரோல் தர மறுத்ததால் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.