பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 19 March 2019 7:52 PM GMT)

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழப்பழுவூர்,

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் கலைமணி தலைமை தாங்கினார். இதில் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாவட்ட தலைவர் பாக்கியம், அரியலூர் ஒன்றிய செயலாளர் கலையரசி மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story