வானவில் : உணவைக் கெடாமல் பாதுகாக்கும் ‘சிலோ’


வானவில் : உணவைக் கெடாமல் பாதுகாக்கும் ‘சிலோ’
x
தினத்தந்தி 20 March 2019 8:04 AM GMT (Updated: 20 March 2019 8:04 AM GMT)

சில நேரம் காய்கறிகள், பழங்கள் முதலியவை எப்போது வாங்கினோம் என்று மறந்து போவதால் பிரிட்ஜுக்குள் வெகு நாட்கள் இருந்து அழுகிப் போய்விடும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய பிரச்சினையை எதிர்கொள்வார்கள்.

 பொருட்களை வாக்குவம் சீலிங் முறையில் பாதுகாப்பதால், அதாவது காற்றை முழுவதும் உறிஞ்சி எடுத்த பின்பு சேமிப்பதால் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் தாக்காமல் உணவு பொருள் வீணாகாது. ‘சிலோ’ என்னும் இந்த சாதனம் உணவை கெட்டுப் போகாமல் வாக்குவம் சீல் செய்து தருகிறது. இதற்கென பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டுள்ள டப்பாக்களில் உணவுப் பொருளை நிரப்பி, இந்த சாதனத்தில் வைத்து சீல் செய்ய வேண்டிய பொத்தானை அழுத்தினால், அந்த டப்பாவில் இருக்கும் காற்றை முற்றிலும் உறிஞ்சி அழகாக சீல் செய்கிறது சிலோ. பிளாஸ்டிக் கவர்களோ, பைகளோ இன்றி இந்த தரமான BPA என்னும் கெடுதலான பிளாஸ்டிக் இல்லாத டப்பாக்களில் உணவையோ, காய்கறிகள் மற்றும் பழங்களையோ சேமித்து வைக்கலாம்.

இந்த சாதனத்தில் அலெக்சா பொறுத்தப்பட்டுள்ளதால் நமது குரலின் கட்டளைகளிலேயே இதை இயக்கலாம். ஒவ்வொரு முறை இதில் உணவு பொருட்களை சீல் செய்யும் போது, தேதி, நேரம், எடை ஆகியவற்றை செயலி மூலம் நமது செல்போனுக்கு தகவலாக அனுப்பி விடும்.அப்பொருளின் கெடு முடியும் முன்னர் நமக்கு அலெர்ட் மூலம் தெரியப்படுத்தும். மாமிசத்தை கூட சீக்கிரம் கெட்டுப் போகாமல் இம்முறையில் பதப்படுத்தலாம்.

Next Story