76 தேர்வுகள் ஒத்திவைப்பு : மும்பை பல்கலைக்கழகம் அறிவிப்பு


76 தேர்வுகள் ஒத்திவைப்பு : மும்பை பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2019 12:00 AM GMT (Updated: 21 March 2019 9:58 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 76 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மும்பை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் 4 கட்டமாக ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்தநிலையில் 3 மற்றும் 4-ம் கட்ட தேர்தல் நடக்கும் 23 மற்றும் 29-ந்தேதிகளில் மும்பை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு 76 தேர்வுகளை அறிவித்து இருந்தது. இவற்றில் 30 வணிகம் மற்றும் மேலாண்மை துறை தேர்வுகள் ஆகும். 17 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வுகளும், 29 இண்டர்டிசிலிப்பிலினரி பேகல்டி தேர்வுகளும் நடக்க இருந்தன.

இந்தநிலையில் அந்த தேதிகளில் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த 76 தேர்வுகளையும் பல்கலைக்கழகம் ஒத்திவைத்து உள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறு தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என மும்பை பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

Next Story