நாட்டின் பாதுகாப்புக்காக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி


நாட்டின் பாதுகாப்புக்காக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 23 March 2019 4:45 AM IST (Updated: 23 March 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் பாதுகாப்புக்காக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.

காரைக்குடி,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி காரைக்குடி பல்கலைக்கழக சாலையில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவும், தோழமை கட்சியின் செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.ஆர்செந்தில்நாதன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், பா.ம.க. மாவட்ட செயலாளர் ஆல்பர்ட், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் திருவேங்கடம் உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரவை மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மனுமான அசோகன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விசுவநாத கோபாலன், தே.மு.தி.க. நகர செயலாளர் ருக்மா சரவணன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் திருஞானம், சாக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்ரமணியன் உள்பட பலர் பேசினர்.

தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:– வருகிற 25–ந் தேதி தோழமைக்கட்சியினருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றோம். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். இந்த நோக்கத்தோடுதான் தேர்தலை சந்திக்கிறோம். தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி வேண்டும் அதற்காக சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி. வி. கே. ஆர். முருகானந்தம் பா.ஜனதா நகர தலைவர் சந்திரன், அ. தி. மு. க. மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்ராதேவி நகர இளைஞர் அணி செயலாளர் இயல் தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story