நெல்லை நாடாளுமன்ற தொகுதி, அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் அறிமுக கூட்டம்


நெல்லை நாடாளுமன்ற தொகுதி, அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் அறிமுக கூட்டம்
x
தினத்தந்தி 22 March 2019 11:03 PM GMT (Updated: 22 March 2019 11:03 PM GMT)

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் அறிமுக கூட்டம் நேற்று பாளையங்கோட்டையில் நடந்தது.

நெல்லை, 

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மனோஜ்பாண்டியன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை அறிமுகப்படுத்தும் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சட்டமன்ற தொகுதி வாரிய நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், கே.ஆர்.பி. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் ஜெனி வரவேற்று பேசினார். தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் வேட்பாளர் மனோஜ்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்பேது அவர் பேசும் பேது, “என்னை வேட்பாளரக அறிவித்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றியை தெரிவித்து கெள்கிறேன். நான் மேல்சபை உறுப்பினராக இருந்த போது, குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேக்க தொட்டி கட்டி கொடுத்தேன். அனைத்து கிராமங்களுக்கும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தேன். என்னை எம்.பி.யாக தேர்வு செய்தால் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன். புதிய திட்டங்களை கேட்டு பெறுவேன்“ என்றார்.

கூட்டத்தில் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அரிகர சிவசங்கர், சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், கூட்டணி கட்சிகளை சேர்ந்த பா.ஜனதா கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முகமது அலி, பா.ம.க. மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை செயலாளர் நெல்லையப்பன், ஊரக பிரிவு செயலாளர் சண்முக சுதாகர், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story