தென்காசியில் கல்லூரி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
தென்காசியில் கல்லூரி மாணவர்களின் தேர்தல் விழுப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை,
தென்காசி காசிவிசுவநாதர் கோவில் அருகே கல்லூரி மாணவ-மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஷில்பா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி தென்காசியின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலதத்தில் பங்கேற்ற மாணவர்கள், வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்னர் அவர் பதற்றமான வாக்குச்சாவடியான தென்காசி பொண்ணபலம் நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் ஷில்பா தேர்தல் அலுவலர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் கூறும் போது, “நெல்லை மாவட்டத்தில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 3 வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டேன். தேர்தல் அமைதியாக நடத்துவதற்கு உண்டான ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது“ என்றார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story