படப்பை அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை
படப்பை அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மணிமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் மது குடிப்பதற்காக படப்பை அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் டாஸ்மாக் கடையின் உள்ளே நுழைந்து பாஸ்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், சோமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காஞ்சீபுரத்தில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story