மாவட்ட செய்திகள்

தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதியதில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாவு உடுமலை அரசு ஊழியர் படுகாயம் + "||" + The car hit the car From Pollachi man Death

தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதியதில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாவு உடுமலை அரசு ஊழியர் படுகாயம்

தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதியதில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாவு உடுமலை அரசு ஊழியர் படுகாயம்
தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதியதில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் பலியானார். இந்த விபத்தில் உடுமலையை சேர்ந்த அரசு ஊழியர் படுகாயம் அடைந்தார்.

தாராபுரம்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி கொள்ளுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வஞ்சிமுத்து (வயது 42). தாராபுரம் எல்லீஸ் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர்கள் இருவரும் நண்பர்கள். நாகராஜ் உடுமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை தாராபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தனது நண்பரை பார்ப்பதற்காக வஞ்சிமுத்து நேற்று உடுமலைக்கு காரில் வந்தார். அங்கு நாகராஜை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் சேர்ந்து காரில் தாராபுரம் வந்தனர். காரை நாகராஜன் ஓட்டி வந்துள்ளார்.

தாராபுரம்–உடுமலை சாலையில் சென்னாக்கல்பாளையம் அருகே வந்த போது, அந்த வழியாக பக்கவாட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர், நாகராஜ் ஓட்டி வந்த காருக்கு குறுக்கே வந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ் மோட்டார் சைக்கிளில் மோதிவிடக்கூடாது என்பதற்காக காரை சாலையிலிருந்து கீழே இறக்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த மரத்த்ன் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் முன்பகுதியில் அமர்ந்திருந்த வஞ்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகே இருந்தவர்கள் நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
2. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
3. பஸ் - சுற்றுலா வேன் மோதல், கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் படுகாயம்
ஓசூரில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த தனியார் பஸ்சும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
4. காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி
காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.
5. சீனாவில் கப்பல் மூழ்கி 7 பேர் சாவு
சீனாவில் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள்.