ஆதரவற்றோர் இல்லத்தில் காணாமல் போனான்: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் மீட்பு


ஆதரவற்றோர் இல்லத்தில் காணாமல் போனான்: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் மீட்பு
x
தினத்தந்தி 25 March 2019 3:30 AM IST (Updated: 25 March 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஆதரவற்றோர் இல்லத்தில் காணாமல் போன சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டான்.

கோத்தகிரி,

ஊட்டி அருகே குருத்துக்குளியை சேர்ந்தவர் சசிகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். சசிகுமார் தனது 12 வயது மகன் கார்த்திக்கை, கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் செயல்படும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார். தற்போது கார்த்திக் அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் ஆதரவற்றோர் இல்லத்தில் நேற்று காலை கார்த்திக் இல்லை. அவன் காணாமல் போனது குறித்து கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவனை தேடினர். இதற்கிடையில் ஆதரவற்றோர் இல்ல வளாகத்தில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் கார்த்திக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவனை ஆதரவற்றோர் இல்ல ஊழியர்கள் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு சிறுநீர் கழிக்க அறையை விட்டு வெளியே வந்தபோது, யாரோ மர்ம ஆசாமி தனது வாயை பொத்தி கை, கால்களை கட்டி விறகுகள் வைக்கப்பட்டு இருக்கும் அறைக்குள் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தான். பின்னர் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து படிக்க விருப்பமில்லை என்று சிறுவன் போலீசாரிடம் தெரி வித்தான். உடனே போலீசார் சிறுவனை அவனது தந்தை யுடன் அனுப்பி வைத்த னர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

Next Story