சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் சங்கு ஊதி நூதன போராட்டம்


சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் சங்கு ஊதி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2019 11:55 PM GMT (Updated: 28 March 2019 11:55 PM GMT)

நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மில் தொழிலாளர்கள் நேற்று சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சுதேசி-பாரதி மில் அனைத்து தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள், கடந்த 8 மாதமாக தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தையும், 2018-ம் ஆண்டு தீபாவளி போனசை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம், கருப்பு கொடி ஏந்தி போராட்டம், பிச்சையெடுக்கும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மேலும் தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் நேற்று மறைமலையடிகள் சாலையில் உள்ள சுதேசி மில்லின் நுழைவு வாயிலில் சங்கு ஊதி நூதன போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் நிலுவை சம்பளத்தையும், போனசையும் உடனடியாக வழங்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story