மே மாதம் 31-ந் தேதிக்குள் நடிகர் யஷ், வாடகை வீட்டை காலி செய்ய வேண்டும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


மே மாதம் 31-ந் தேதிக்குள் நடிகர் யஷ், வாடகை வீட்டை காலி செய்ய வேண்டும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 March 2019 11:00 PM GMT (Updated: 29 March 2019 10:00 PM GMT)

மே மாதம் 31-ந் தேதிக்குள் நடிகர் யஷ், வாடகை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு, 

மே மாதம் 31-ந் தேதிக்குள் நடிகர் யஷ், வாடகை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வாடகை வீட்டில்...

‘கே.ஜி.எப்.’ படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் யஷ். இவர் பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வாடகை சரியாக செலுத்தவில்லை என்று கூறி வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் கூறினார்.

இந்த விஷயத்தில் வீட்டின் உரிமையாளருக்கும், நடிகர் யஷ்சுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மார்ச் 31-ந் தேதிக்குள் (நாளை) காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

6 மாதம் காலஅவகாசம்

இந்த நிலையில் நடிகர் யஷ்சின் தாயார் புஷ்பா, ஐகோாட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வீட்டை காலி செய்ய மேலும் 6 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது புஷ்பா தரப்பில் ஆஜரான வக்கீல், “சொந்த ஊரான ஹாசனில் சொந்தமாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த கட்டுமான பணிகள் முடிவடையும் வரை இந்த வாடகை வீட்டை காலி செய்ய 6 மாதங்கள் காலஅவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

மே 31-ந்தேதிக்குள் காலி செய்ய வேண்டும்

அதற்கு வீட்டின் உரிமையாளர் தரப்பில் ஆஜரான வக்கீல், 6 மாதங்கள் காலஅவகாசம் தர முடியாது என்றும், வேண்டுமென்றால் 2 மாதங்கள் வழங்குவதாகவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மே மாதம் 31-ந் தேதிக்குள் நடிகர் யஷ், குடும்பத்தினர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story