திருச்செங்கோட்டில் ரூ.1.40 கோடிக்கு மஞ்சள் ஏலம்


திருச்செங்கோட்டில் ரூ.1.40 கோடிக்கு மஞ்சள் ஏலம்
x
தினத்தந்தி 13 April 2019 9:30 PM GMT (Updated: 13 April 2019 8:06 PM GMT)

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ.1.40 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

திருச்செங்கோடு, 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சனிக்கிழமைதோறும் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3000 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட வியாபாரிகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு மஞ்சளை ஏலம் எடுத்தனர்.

இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.7,117-க்கும், அதிகபட்சமாக ரூ.9,299 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6,599-க்கும், அதிகபட்சமாக ரூ.7,107 வரையிலும், பனங்காலி மஞ்சள் ரூ.12,012-க்கும், அதிகபட்சமாக ரூ.15,585 வரையிலும் ஏலம் போனது. நேற்று மொத்தம் ரூ.1.40 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

Next Story