பொய் பேசுவதில் பிரதமர் மோடி வல்லவர் காங். பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் கடும் தாக்கு


பொய் பேசுவதில் பிரதமர் மோடி வல்லவர் காங். பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் கடும் தாக்கு
x
தினத்தந்தி 17 April 2019 10:00 PM GMT (Updated: 17 April 2019 6:47 PM GMT)

பொய் பேசுவதில் பிரதமர் மோடி வல்லவர் என்று காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் கடுமையாக தாக்கி பேசினார்.

பெங்களூரு, 

பொய் பேசுவதில் பிரதமர் மோடி வல்லவர் என்று காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் கடுமையாக தாக்கி பேசினார்.

சமையல் எரிவாயு விலை

காங்கிரஸ் சார்பில் தார்வாரில் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் மார்டன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் கலந்து கொண்டு பேசியதாவது:-

மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு அதிகளவில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. பண மதிப்பிழப்பு, சரக்கு-சேவை வரி, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஆதரிக்க வேண்டும்

மோடி பொய் பேசுவதில் வல்லவர். பா.ஜனதாவுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், மக்கள் இன்னும் தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு உள்ளது. அதனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு காங்கிரசை மக்கள் ஆதரிக்க வேண்டும். பொய் வாக்குறுதிகளை அளிப்பதிலேயே பா.ஜனதாவினர் கால விரயம் செய்துவிட்டனர்.

ரூ.15 லட்சம் டெபாசிட்

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி வாக்குறுதி அளித்தார். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு எச்.கே.பட்டீல் பேசினார்.

Next Story