கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கடந்த ஆண்டே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி இந்த ஆண்டு கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் பல பள்ளிகளில் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
கோடையில் வெப்ப அளவு அதிகரித்துள்ளதாலும், வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளித்திடவேண்டும். எனவே மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது.
இதனை பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கிறோம். மேலும் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். உத்தரவை மீறி சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் பள்ளிகள் மீது எவ்வித காலதாமதமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story