விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 72 சதவீத வாக்குப்பதிவு - சாத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 79 சதவீதம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 72.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிக பட்சமாக 79 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது
விருதுநகர்,
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. இதில் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்கள் அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 89ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 346 வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.02 ஆகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட 4 சதவீதம் குறைவாகவே வாக்குப்பதிவு ஆகி உள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிக பட்சமாக 79 சதவீதமும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் குறைந்த பட்சமாக 68.06 சதவீதமும் பதிவாகி உள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478. பதிவானது 2 லட்சத்து 11 ஆயிரத்து 242. பதிவான சதவீதம் 69.38.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர் 2 லட்சத்து 66 ஆயிரத்து 831. பதிவானது 1 லட்சத்து 98 ஆயிரத்து 29. பதிவான சதவீதம் 74.22.
சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 696. பதிவானது 1 லட்சத்து 86 ஆயிரத்து 990. பதிவானது 79 சதவீதம். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 355. பதிவானது 1 லட்சத்து 71 ஆயிரத்து 201. பதிவானது 69.49 சதவீதம்.
விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 106. பதிவானது 1 லட்சத்து 44 ஆயிரத்து 379. பதிவானது 68.06 சதவீதம். அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 2 லட்சத்து 14 ஆயிரத்து 334 வாக்குகள். பதிவானது 1 லட்சத்து 54 ஆயிரத்து 504. பதிவானது 72.15 சதவீதம்.
இம்மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சட்டடமன்ற தொகுதியில் 71.47 சதவீதமும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 73.02 சதவீதமும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 74.46 சதவீதமும் வாக்குப்பதிவு ஆகி உள்ளது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை தென்காசி நாடாளுமன்ற தொகுதியிலும், திருச்சுழி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.
Related Tags :
Next Story