பிளஸ்–2 தேர்வில் 88.03 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் 27–வது இடத்தை பிடித்தது


பிளஸ்–2 தேர்வில் 88.03 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் 27–வது இடத்தை பிடித்தது
x
தினத்தந்தி 19 April 2019 11:00 PM GMT (Updated: 19 April 2019 2:32 PM GMT)

பிளஸ்–2 தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 88.03 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 27–வது இடத்தை திருவண்ணாமலை பிடித்துள்ளது.

திருவண்ணாமலை, 

தமிழ்நாட்டில் பிளஸ்–2 அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1–ந் தேதி தொடங்கி 19–ந் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் ஆகியோரை சேர்த்து 13 ஆயிரத்து 85 மாணவர்களும், 14 ஆயிரத்து 396 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 481 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 11 ஆயிரத்து 122 மாணவர்களும், 13 ஆயிரத்து 70 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 192 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 88.03 ஆகும். மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் 27–வது இடத்தை பிடித்துள்ளது.

இதில் 3 அரசுப் பள்ளிகள், 4 அரசு நிதியுதவிப் பள்ளிகள், 26 தனியார் பள்ளிகள் என 33 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு மாநிலத்தில் 23–வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை இந்த ஆண்டு 27–வது இடத்தை பிடித்து இருந்தாலும், கடந்த கல்வியாண்டை விட தற்போது சதவீதம் முன்னேற்றம் அடைந்து உள்ளது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 134 அரசுப் பள்ளிகளில் இருந்த மொத்தம் 17 ஆயிரத்து 770 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 14 ஆயிரத்து 918 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 83.95 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளைப் பொறுத்தவரையில் 23–வது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது.

இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story