வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்ட 3 புலிக்குட்டிகள்


வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்ட 3 புலிக்குட்டிகள்
x
தினத்தந்தி 19 April 2019 10:30 PM GMT (Updated: 19 April 2019 6:52 PM GMT)

வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக 3 புலிக்குட்டிகள் விடப்பட்டன.

வண்டலூர்,

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

வண்டலூர் பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும் நகுலா என்ற ஆண் புலிக்கும் வெள்ளை மரபணு உடைய 3 குட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி பிறந்தன.

அதில் 2 குட்டிகள் அடர் வரிகளை பெற்று, அதிக கருமை நிறத்தில் காணப்பட்டன. மற்றொரு பெண் குட்டி அதன் தாயையொத்து வெண்ணிறத்தில் உள்ளது.

3 மாதமான 2 கருப்பு மற்றும் ஒரு வெள்ளைநிற புலிக் குட்டிகளை அதன் தாயான நம்ருதாவுடன் பொதுமக்களின் பார்வைக்கு தனி விலங்கு கூடத்தில் விடப்பட்டுள்ளது. இந்த குட்டிகளுடன் சேர்த்து புலிகளின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் கோடை காலத்தை சிறப்பாக கழிக்க பார்வையாளர்களுக் காக சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பூங்கா கடை ஒன்றை திறந்து அதில் விலங்குகளின் படங்கள் பொறித்து நினைவுப்பொருட்கள், சாவிக்கொத்து, குல்லா, பனியன்கள், பொம்மைகள் முதலான பொருட் கள் பார்வையாளர்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள் ளது. வெகுவிரைவில் இந்த கடையில் விலங்கு சார்ந்த நிறைய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளன. முப்பரிமாண படக்காட்சியான வனஉலாவிடம் கடல் நீரடி காட்சிகள் பூங்காவில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று, ஏராளமான பார்வையாளர்கள் கண்டுக்களித்து தங்களது வருகையை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story