விக்ரோலியில் கோர விபத்து லாரி கவிழ்ந்து 4 பேர் உடல் நசுங்கி சாவு ஒருவர் படுகாயம்


விக்ரோலியில் கோர விபத்து லாரி கவிழ்ந்து 4 பேர் உடல் நசுங்கி சாவு ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 19 April 2019 11:30 PM GMT (Updated: 19 April 2019 9:45 PM GMT)

விக்ரோலியில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் சாலையோரம் நின்ற 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மும்பை, 

விக்ரோலியில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் சாலையோரம் நின்ற 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

லாரி கவிழ்ந்தது

மும்பை விக்ரோலி, சூர்யா நகர் ரோட்டில் நேற்று காலை 11.30 மணியளவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகம் அருகே சென்ற போது, லாரியின் சக்கரம் அங்கு சாக்கடைக்காக தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் சிக்கியது. இதில், லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது. அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த 5 பேர் துரதிருஷ்டவசமாக லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கினர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் கவிழ்ந்து கிடந்த லாரியின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

4 பேர் பலி

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அதில் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். மற்ற ஒருவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள், அஸ்வின் (வயது32), விஷால் (22), அப்துல் ஹமீது (42), சந்திரசேகர் (40) என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story