இலங்கையில் குண்டு வெடிப்பு: தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் அர்ஜூன்சம்பத் வலியுறுத்தல்


இலங்கையில் குண்டு வெடிப்பு: தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் அர்ஜூன்சம்பத் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 April 2019 11:00 PM GMT (Updated: 28 April 2019 8:34 PM GMT)

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அர்ஜூன்சம்பத் கூறினார்.

கும்பகோணம்,

பயங்கரவாத அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்த தேவையான உதவிகள் தமிழகத்தில் இருந்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தென் எல்லையில் பயங்கரவாதம் உருவாகி உள்ளது. தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் நுழையும் அபாயம் உள்ளது. அதை கண்காணிக்க வேண்டும். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கும், தமிழகத்தில் இந்து தலைவர்களை கொலை செய்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தற்போது உறுதியாக தெரியவருகிறது.

பாதுகாப்பு

இதுபோன்ற பல்வேறு செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை போல் தமிழகம் மற்றும் கேரளாவில் நடக்கலாம்.

இந்த நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story