கோயம்பேட்டில் ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் கை நசுங்கியது


கோயம்பேட்டில் ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் கை நசுங்கியது
x
தினத்தந்தி 17 May 2019 7:38 PM GMT (Updated: 17 May 2019 7:38 PM GMT)

கோயம்பேட்டில் ஆம்னி பஸ்சின் முன்பக்க சக்கரம் வாலிபர் கை மீது ஏறி இறங்கியது.

பூந்தமல்லி, 

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அருண்(வயது 24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

கோயம்பேடு 100 அடி சாலை அருகே செல்லும்போது பின்னால் வந்த ஆம்னி பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருணின் வலது கை மீது ஆம்னி பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது கை நசுங்கியது.

உடனடியாக அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவரான ராஜா(35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story