தண்ணீருக்குள் அமர்ந்து ‘ரூபிக்ஸ் கியூப்' விளையாடி மும்பை வாலிபர் கின்னஸ் சாதனை


தண்ணீருக்குள் அமர்ந்து ‘ரூபிக்ஸ் கியூப் விளையாடி மும்பை வாலிபர் கின்னஸ் சாதனை
x
தினத்தந்தி 19 May 2019 11:52 PM GMT (Updated: 19 May 2019 11:52 PM GMT)

தண்ணீருக்குள் அமர்ந்து ‘ரூபிக்ஸ் கியூப்' விளையாடி மும்பை வாலிபர் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.

மும்பை,

ஒரே நேர்கோட்டில் நிறங்களை ஒன்றிணைக்கும் ‘ரூபிக்ஸ் கியூப்' விளையாட்டை உலகம் முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமாக விளையாடி வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த சின்மய் பிரபு (வயது20) என்ற வாலிபர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி தண்ணீருக்குள் அமர்ந்து ரூபிக்ஸ் கியூப் விளையாட்டை 1 நிமிடம் 48 வினாடிகளில் விளையாடி முடித்து சாதனை படைத்தார். அவர் 9 நேர்கோடுகளில் வண்ணங்களை ஒன்றிணைத்து சாதனை படைத்து இருந்தார்.

இந்தநிலையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. மேலும் அதற்கான சான்றிதழ் வாலிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாதனை படைத்த வாலிபர் சின்மய் பிரபு கூறியதாவது:-

தண்ணீரில் நீந்தி கொண்டே ‘ரூபிக்ஸ் கியூப்' விளையாடுவது எனக்கு பிடிக்கும். எனவே தண்ணீரில் மூழ்கி ‘ரூபிக்ஸ் கியூப்' விளையாடி சாதிக்க முடிவு செய்தேன். முதலில் 30 முதல் 35 வினாடிகள் மட்டுமே என்னால் தண்ணீருக்குள் இருக்க முடிந்தது. தற்போது என்னால் 1½ நிமிடம் தண்ணீருக்குள் இருக்க முடியும். 5 மாதங்கள் கடுமையான உழைப்புக்கு பிறகே இதை சாதிக்க முடிந்தது.

Next Story