வானவில் : களை நீக்கும் ரோபோ


வானவில் : களை நீக்கும் ரோபோ
x
தினத்தந்தி 22 May 2019 12:26 PM IST (Updated: 22 May 2019 12:26 PM IST)
t-max-icont-min-icon

எல்லா துறைகளை போலவே விவசாயத்திற்கும் உதவும் வகையில் பல நவீன கருவிகளும், ரோபோக்களும் சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன

விவசாயத்திற்கு உதவும் வகையில் பல நவீன கருவிகளும், ரோபோக்களும் சந்தையில் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் புதிதாக இடம் பெறுகிறது இந்த களை நீக்கும் ரோபோ. ஈக்கோ ரோபோடிக்ஸ் என்னும் நிறுவனம் தயாரித்த இந்த ஏழு அடி உயர ரோபோ சோலார் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

பார்ப்பதற்கு நான்கு சக்கர தள்ளு வண்டியைபோல இருக்கும் இந்த ரோபோ களைகளை நீக்குவதோடு இல்லாமல் பூச்சிக்கொல்லி மருந்தையும் அளவோடு தெளிக்கிறது. மனிதர்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் போது அளவு தெரியாமல் அதிகமாக தெளித்து விட வாய்ப்புண்டு.

ஆனால் இந்த ரோபோ மிகச் சிறிய அளவு மருந்தை தெளித்து பயிரைக் காப்பதோடு, நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் பொருட்களிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த ரோபோ களை நீக்கும் அழகே தனி. பயிர்களின் நடுவே வளர்ந்திருக்கும் களையை சென்சார் மூலம் அறிந்து அதனை சுற்றி ஒரு கப் போன்ற அமைப்பால் மூடுகிறது.

அந்த செடியின் மீது மட்டும் மருந்தை தெளித்து பூச்சிகளை கொல்கிறது. இது போல முழு வயலையும் கண்காணிக்கிறது. ஒரு நாளில் ஐந்து ஏக்கர்கள் வரை இந்த ரோபோவின் கவனிப்பில் வைக்கலாம். ஒரு களையை கூட விடாமல் அகற்றுகிறது.


Next Story