மாவட்ட செய்திகள்

செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை + "||" + Farmers demand to be dried up at Chelichurichi lake

செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை தாலுகாவில் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 300-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் கடுமையான வறட்சியின் காரணமாக வறண்டு கிடக்கிறது. புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியை சேர்ந்த செல்லிக்குறிச்சி ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் புதுக்கோட்டை உள்ளூர், மழவேனிற்காடு பேய்க்காலிக்காடு, நடுவிக்காடு உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கல்லணைக்கால்வாயில் போதிய அளவு பாசனத்திற்கு தண்ணீர் வராததாலும், மழை இல்லாததாலும் கடல் போல் நீர் நிரம்பி காட்சி அளித்த செல்லிக்குறிச்சி ஏரி, இப்போது கடுமையான வறட்சி காரணமாக விளையாட்டுத்திடல் போல் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

விவசாயிகள் கோரிக்கை

அரசு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தாலும் செல்லிக்குறிச்சி ஏரி மட்டுமல்ல இதுபோன்ற எண்ணற்ற ஏரி, குளங்களும் தூர்வாரப் படவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

பாசனத்திற்கு மேட்டூர் அணை திறந்தாலும் நேரடியாக நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க முதலில் ஏரி, குளங்களை தூர்வாரி நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். எனவே செல்லிக்குறிச்சி ஏரி உள்பட அனைத்து ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. கும்பகோணம் பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
கும்பகோணம் பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை
ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம் அடைய வழிவகுக்கும் பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. குறுவைக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து கல்லணையில் கொதிக்கும் மணலில் உருண்டு விவசாயிகள் போராட்டம்
குறுவைக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கல்லணையில் கொதிக்கும் மணலில் உருண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கலெக்டர் காலில் விழுந்து முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.