வானவில் : பி.எம்.டபிள்யூ.வின் எஸ் 1000.ஆர்.ஆர்.


வானவில்  : பி.எம்.டபிள்யூ.வின் எஸ் 1000.ஆர்.ஆர்.
x
தினத்தந்தி 29 May 2019 5:30 AM GMT (Updated: 29 May 2019 5:30 AM GMT)

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பி.எம்.டபிள்யூ. நிறுவனத் தயாரிப்புகளில் ஒன்றான எஸ் 1000.ஆர்.ஆர். மாடல் மோட்டார் சைக்கிள் இந்திய சாலைகளில் சீறிப் பாய வருகிறது. இது 999 சி.சி. திறன் கொண்டது.

207 ஹெச்.பி. திறனை 13,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 11 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது. முந்தைய மாடலைக் காட்டிலும் 8 ஹெச்.பி. திறன் இதில் கூடுதலாக புகுத்தப்பட்டுள்ளது.

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பிரத்யேக நுட்பமான ஷிப்ட்காம் தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் பேக்கேஜும் இதில் அதிக அளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ்., டைனமிக் டிராக்சன் கண்ட்ரோல் ஆகியன இதில் கூடுதல் அம்சங்களாகும். மழைச்சாலை, சாதாரண சாலை, டைனமிக் மற்றும் பந்தய சாலை என சாலைகளின் தன்மைக்கேற்ப இயங்கும் வகையில் மாற்றங்களைச் செய்ய முடியும்.

இதில் 6.5 டி.எப்.டி. டிஸ்பிளே உள்ளது. இதில் முதல் முறையாக பிரெம்போ பிரேக்குகளுக்குப் பதிலாக ஹேயெஸ் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல சாக்ஸ் பிராண்ட் சஸ்பென்சன்கள் உள்ளன. வாகனத்தின் எடையைக் குறைப்பதற்காக இதில் ஸ்திரமான அதேசமயம் எடை குறைந்த உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் எடை 197 கிலோவாகும். முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் எடை 11 கிலோ குறைவாகும்.

இதில் ஸ்டாண்டர்ட் மாடலே ரூ.18 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பிரீமியம் மாடல் விலை மேலும் சில லட்சங்கள் அதிகமாக இருக்கும் என்றும் சுமார் ரூ.25 லட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிகிறது. இந்திய சாலைகளில் ஜீன் மாதம் 25-ந் தேதி இந்த மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய பி.எம்.டபிள்யூ. திட்டமிட்டுள்ளது.

Next Story