கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் யு.டி.காதர் பேட்டி


கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் யு.டி.காதர் பேட்டி
x
தினத்தந்தி 29 May 2019 10:00 PM GMT (Updated: 29 May 2019 7:06 PM GMT)

கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.

மந்திரிசபை மாற்றியமைக்க...

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதாவுக்கு இழுத்து ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என்று கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதனால் கூட்டணி ஆட்சியை காப்பாற்றி கொள்ள அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, மூத்த மந்திரிகளான யு.டி.காதர், கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ண பைரேகவுடா உள்ளிட்டவர்களிடம் இருந்து பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவுக்கு வந்துள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை நேற்று காலையில் சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜினாமா செய்ய தயார்

மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து தலைவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு வேளை மந்திரிசபை மாற்றி அமைத்தால், அந்த முடிவுக்கும் எல்ேலாரும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி காங்கிரஸ் மேலிடம் கூறினால், நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. கட்சியை விட பதவி பெரியது அல்ல. நான் மட்டும் அல்லாமல், மேலும் சில மந்திரிகள் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல தங்களது பதவியை தியாகம் செய்ய தயாராக உள்ளனர்.

இவ்வாறு மந்திரி யு.டி.காதர் கூறினார்.

Next Story