கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து; அண்ணன்–தம்பி மீது வழக்கு


கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து; அண்ணன்–தம்பி மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Jun 2019 3:30 AM IST (Updated: 3 Jun 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்திய அண்ணன்–தம்பி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை,

கேரளாவை சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது 27). மதுரை ரெயில்நிலைய பகுதியில் தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். திடீர்நகரை சேர்ந்தவர் பாபு என்ற தக்காளி பாபு (41), அவரது தம்பி அன்பு. ஆட்டோ டிரைவர்கள். இவர்கள் 2 பேரும் முகமது ரியாசிடம் ரூ.500 கடன் வாங்கியிருந்தனர். அந்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு முகமது ரியாஸ் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த 2 பேரும் கடனை திருப்பி தர முடியாது என்று கூறியதுடன், அவர்கள் வைத்திருந்த கத்தியால் முகமது ரியாசை குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் பாபு, அன்பு ஆகியோர் மீது திலகர்திடல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story