நீண்டநேரம் தூங்கியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை


நீண்டநேரம் தூங்கியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Jun 2019 4:41 AM IST (Updated: 3 Jun 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

நீண்டநேரம் தூங்கியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ள தலவராம்பூண்டியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 47). கூலித்தொழிலாளியான இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்தநிலையில் பாலாஜியின் 3-வது மகளான நிர்மலா (18). காலையில் நீண்ட நேரம் தூங்குவதாக கூறப்படுகிறது.

இதை அவரது தாய் செண்பகவள்ளி (42) கண்டிப்பதும். இது தொடர்பாக அவர் களுக்கிடையே தகராறு ஏற்படுவதும் வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை நிர்மலா நீண்ட நேரம் தூங்கி உள்ளார். இதனால் கோபம் அடைந்த செண்பகாவள்ளி, மகள் நிர்மலாவை கண்டித்து விட்டு ஆடு மேய்க்க சென்று விட்டார்.

இதில் மனமுடைந்த நிர்மலா அரளிவிதையை(விஷம்) அரைத்து குடித்தார். இதையடுத்து உறவினர்கள் நிர்மலாவை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், அதன் பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை நிர்மலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story