பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள் அதிகாரிகளுக்கு மண்டல இயக்குனர் உத்தரவு


பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள் அதிகாரிகளுக்கு மண்டல இயக்குனர் உத்தரவு
x
தினத்தந்தி 4 Jun 2019 10:15 PM GMT (Updated: 4 Jun 2019 5:35 PM GMT)

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

ஆரணி,

ஆரணி நகராட்சி வளாகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆணையாளர்கள், பொறியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மேலாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வழங்குவதில் எந்த பகுதியிலும் தொய்வு வரக்கூடாது.

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். அதேபோல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும். நகரில் தேவையற்ற குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். வரி இனங்களை காரணம் காட்டாமல், நீதிமன்றம் செல்லாமல் உடனடியாக வரிகளை வசூலிக்க வேண்டும். வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர்கள் கு.அசோக்குமார் (ஆரணி), வை.சுரே‌‌ஷ் (திருவண்ணாமலை), பார்த்தசாரதி (வந்தவாசி), ஸ்டேன்லிபாபு (செய்யாறு), கமால்பா‌ஷா (கள்ளக்குறிச்சி), லட்சுமி (விழுப்புரம்), பிரகா‌‌ஷ் (திண்டிவனம்), பொறியாளர்கள் கணேசன், சுபா‌ஷினி உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் நெடுமாறன் நன்றி கூறினார்.

Next Story