கரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டுகள் ஒதுக்கீடு விவரம்


கரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டுகள் ஒதுக்கீடு விவரம்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:15 PM GMT (Updated: 4 Jun 2019 8:55 PM GMT)

கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங் களில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோன்றிமலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களும், 157 ஊராட்சிகளும் உள்ளன. தற்போது, உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பொது பிரிவினர், பொது பிரிவு பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அந்த பிரிவை சேர்ந்த பெண்கள் என பிரித்து வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் பொது பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 9-ம், பொது பிரிவினருக்கு 5-ம் ஒதுக்கப்பட்டுள்ளன. தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பை (பொது) சேர்ந்தவர்களுக்கு 8-ம், பொதுப்பிரிவினருக்கு 9-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளும் பொது பிரிவை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் பொது பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 18-ம், பொது பிரிவை சேர்ந்தவர்களுக்கு 12-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

குளித்தலை

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகளும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவை (பொது) சேர்ந்தவர்களுக்கு 10-ம், பொது பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 5-ம், பொது பிரிவை சேர்ந்தவர்களுக்கு 8-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் பொது பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10-ம், பொது பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 10-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தோகைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் பொது பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 16-ம், பொது பிரிவை சேர்ந்தவர்களுக்கு 4-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story