வெளிமாநிலத்தவர்களுக்கு பணி: மின்வாரிய அலுவலகம் முற்றுகை, மறியலில் ஈடுபட்ட 35 பேர் கைது


வெளிமாநிலத்தவர்களுக்கு பணி: மின்வாரிய அலுவலகம் முற்றுகை, மறியலில் ஈடுபட்ட 35 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2019 11:15 PM GMT (Updated: 4 Jun 2019 9:47 PM GMT)

மின்வாரியத்தில்வெளிமாநிலத்தவர்கள்பணி நியமனம்செய்யப்பட்டதை கண்டித்து கோவையில்உள்ளமின்வாரியஅலுவலகத்தை தந்தை பெரியார்திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார்கைது செய்தனர்.

கோவை,

தமிழ்நாடுமின்வாரியத்தில்325துணைமின்பொறியாளர்காலிப்பணியிடங்களுக்குநடைபெற்ற தேர்வில் ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்ளிட்டமாநிலங்களை சேர்ந்த38பேர் தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர்.இதற்கு பல்வேறுஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனை கண்டித்து தந்தை பெரியார்திராவிடர் கழகம் சார்பில் கோவைடாடாபாத்தில்உள்ள தலைமைமின்வாரியஅலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.இதற்கு போலீசார்அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும்தந்தை பெரியார்திராவிடர் கழகத்தினர் நேற்று மாலைமின்வாரியஅலுவலகம் முன் குவிந்தனர்.

பின்னர் அவர்கள்மின்வாரியஅலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இந்த போராட்டத்திற்குபொதுச்செயலாளர்கு.ராமகிருட்டிணன்தலைமை தாங்கி கூறியதாவது:-

கடந்த 2016-ம்ஆண்டு தமிழகஅரசு நடத்தும்தேர்வுகளுக்கு தமிழகம்மட்டுமின்றி பிறமாநிலங்களை சேர்ந்தவர்களும்விண்ணப்பிக்கலாம் என்று தமிழகஅரசு சட்ட திருத்தம்கொண்டு வந்தது.இதன்காரணமாகவெளிமாநிலத்தை சேர்ந்த 38 பேர் தற்போது பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்களின் பணி நியமன உத்தரவை ரத்து செய்வதோடு, எதிர்காலத்தில் பிற மாநிலத்தவர்கள்மாநில பணிகளுக்குவரமுடியாதபடி தடை சட்டம்நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

முற்றுகை போராட்டத்தில்ஈடுபட்டவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு,முள்ளுஏற்பட்டது. மேலும்முற்றுகை போராட்டத்தில்ஈடுபட்டவர்கள் திடீரென்றுமின்வாரியம்அலுவலகம் முன்உள்ள சாலையில்அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 35பேரை போலீசார்கைது செய்தனர்.

Next Story