பேரம்பாக்கத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை


பேரம்பாக்கத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 16 Jun 2019 4:30 AM IST (Updated: 16 Jun 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

தடையிலலா மின்சாரம் வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து சுமார் 20–க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம், சின்ன மண்டலி, சிற்றம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, பண்ணூர், கண்ணூர் போன்ற பகுதிகளுக்கும் சீரான முறையில் மின்சார வினியோகம் வழங்கப்படவில்லை.

குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு பலமுறை மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம் குமாரச்சேரியில் இருந்து 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரம்பாக்கம் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

மின்வாரிய அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story